2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வெளிநாடுகளிலிருந்து வருவோர் தொடர்பில் உடன் அறிவிக்கவும்

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

வெளிநாடுகளில் இருந்து  மூதூர் பகுதிக்கு வருவோர் தொடர்பில் உடனடியாக மூதூர் பொது சுகாதார வைத்தியப் பிரிவுக்கு அறிவிக்குமாறு, மூதூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் வை.ஜெஸ்மி, பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு அவர் அறிவித்துள்ளதாவது, “உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாகவும் வேகமாகவும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தற்பொழுது இலங்கையிலும் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. இதனால் அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

“அரச சுகாதாரத் திணைக்களங்கள் இது தொடர்பில் மிகக் கவனமாகச் செயற்பட்டு வருகின்றன. இத்தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் பிரத்தியேக ஏற்பாடுகளும் அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. எனவே, அச்சம்கொள்ளாது வெளிநாடுகளில் இருந்து  மூதூர் பகுதிக்கு வருவோர் தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X