Niroshini / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் நேற்றிரவு (16) மஹதிவுல்வெவ பகுதியில் வீதியோரமாக நின்று கொண்டிருந்த நபர் லொறி ஒன்றில் மோதுண்டதில் பலத்த காயங்களுக்குள்ளானார்.
படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹதிவுல்வெவ - திம்பிரிவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகத் பண்டார (40 வயது) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
மீன் பிடிப்பதற்காக குளத்துக்குச்சென்று வலையை போட்டு விட்டு வீட்டுக்கு சென்ற போது வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றச்சென்ற லொறி வீதியோரமாக நின்றவரை மோதிவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.
குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை மொறவெவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago