Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.கீத்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை -கண்டி வீதியின் 4ஆம் கட்டைப் பிரதேசத்தில், ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நால்வர், நேற்று (11) மாலை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, திருகோணமலை தலமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 31 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நால்வரும் ஹெரோய்னுடன் ஓட்டோவில் பயணம் செய்வதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், திருகோணமலை 4ஆம் கட்டை, 5ஆம் கட்டைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .