2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

திருமலை தமிழ் பாடசாலைகளுக்கு 10 சிங்கள ஆசிரியர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை தமிழ் தேசிய பாடசாலைகளுக்கு 10 சிங்கள ஆசிரியர்கள் ஆங்கில மொழிமூலம் உயர்தரம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய கல்வி அமைச்சு இவர்களை இப்பாடசாலைகளுக்கு நியமித்துள்ளது.

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 4, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 3, புனித மரியாள் கல்லூரி 2, புனித சூசையப்பர் கல்லூரி 1 என இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நால்வரும் புதுன்கிழமை அங்கு நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சான்றிதழ் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .