2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கிழக்கில் விவசாய கைத்தொழில் ஊக்குவிப்புக்கு 14 மில்லியன் ரூபா

Super User   / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எப்.முபாரக்)


கிழக்கு மாகாணத்தில் விவசாய கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய விவசாய அமைச்சு இந்நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

தூய விதை நெல் மற்றும் நாற்று உடமையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுக்கும் முகமாகவே இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் காளான் உற்பத்தி, தேனீ வளர்ப்பு, வீட்டுத் தோட்ட ஊக்குவிப்பு போன்றனவும் இந்நிதியின் மூலம் மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஹுசையின் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--