2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் 19,771 பேர் வெள்ளத்தால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 19,771 பேர் வெள்ளத்தினால் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திருகோணமலை மாவட்ட  இணைப்பாளர் எம்.எம்.முஹாஐப்ர் தெரிவித்துள்ளார்.

மொறவெவ  பிரதேசத்தில் 129 குடும்பங்களை சேர்ந்த 409 பேரும்  வெருகல் பிரதேசத்தில் 14 நலன்புரி நிலையங்களில் 538 குடும்பங்களை சேர்ந்த 1745 பேரும் தம்பலகாமம் பிரதேசத்தில் 04 நலன்புரி நிலையங்களில் 123 குடும்பங்களை சேர்ந்த  369 பேரும் மூதூர் பிரதேசத்தில் 44 நலன்புரி நிலையங்களில் 5370 குடும்பங்களை சேர்ந்த 20582 பேரும் கோமரங்கடவல பிரதேசத்தில் ஒரு நலன்புரி நிலையத்தில் 12 குடும்பங்களை சேர்ந்த 29 பேரும்  கிண்ணியா பிரதேசத்தில் 14 நலன்புரி நிலையங்களில்  922 குடும்பங்களை சேர்ந்த 4066 பேரும் கந்தளாய் பிரதேசத்தில் 03 நலன்புரி நிலையங்களில்  381 குடும்பங்களை சேர்ந்த 1402 பேரும் குச்சவெளி பிரதேசத்தில் 03 நலன்புரி நிலையங்களில்  218 குடும்பங்களை சேர்ந்த 822 பேரும்  பதவிசிறிபுர பிரதேசத்தில் 05 நலன்புரி நிலையங்களில்  51 குடும்பங்களை சேர்ந்த 192 பேரும் சேருவில பிரதேசத்தில் 02 நலன்புரி நிலையங்களில் 148 குடும்பங்களை சேர்ந்த 568 பேரும் திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் 09 நலன்புரி நிலையங்களில் 302 குடும்பங்களை சேர்ந்த  1190 பேரும் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட  இணைப்பாளர் தெரிவித்தார்.  

இவர்களில் 12 வயதிற்கு குறைந்த 10411 சிறுவர்கள் அடங்குவதாகவும் அவர் கூறினார். இவர்களுக்கான சுகாதார பொதிகள் மற்றும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வழங்கி வருவதாகவும் செஞசிலுவைச் சங்கத்தின்
திருகோணமலை கிளைத் தலைவர் டாக்டர் ஈ.ஐப்.ஞானகுணாளன் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--