2021 ஜனவரி 16, சனிக்கிழமை

'செம்மாதுளம்பூ' கவிதை நூல் வெளியீடு

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை  கலை இலக்கிய ஒன்றியமும், 'நீங்களும் எழுதலாம்' கவிதை நூல் வெளியீட்டாளர்களும் இணைந்து கவிஞர் ஷெல்லிதாசனின் (த.கனகரெத்தினம்)  'செம்மாதுளம்பு'10  என்னும் பெயரில் கவிதை நூல் ஒன்றினை அண்மையில் வெளியீட்டு வைத்தனர்.

திருகோணமலை  நகரசபை மண்டபத்தில் நீங்களும் எழுதலாம் கவிதை இதழின் ஆசிரியர் எஸ்.தனபாலசிங்கம்; தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

சட்டத்தரணி ஆ.ஜெகசோதி தம்பு சிவாவிடம் (த.சிவசுப்பிரமணியம்) இருந்து நூலின் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதியினை நகரசபை பதில் தலைவர் க.செல்வராசா (சுப்றா) நூலாசிரியர் ஷெல்லிதாசனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .