2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மின்னல் தாக்கி மாணவன் பலி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மின்னல் தாக்கி திருகோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் பலியானார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த பாடசாலையின் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் நிகார் நிஃழா என்ற 14 வயது மாணவனே இவ்வாறு மரணமானவராவார். வதிவடமாகக் கொண்டவராவார்.

தேசிய மட்ட போட்டி ஒன்றுக்கான கால்ப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த மாணவன் மின்னல் தாக்கத்திற்கு  உள்ளாகி மரணமானார். இதன்போது பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருந்த விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் ஏ.எச்.எம் அக்மலும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் இடியுடன் மழை பெய்தது. நகரத்தில் பெருமளவிலான பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்தது. இதனால் முட்டிக்களி, கேணியடி, ரயில்வே லைன் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--