Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார், எவ்.முபாரக்)
கந்தளாய் பிரதேச சபை நிர்வாகத்திற்கு எதிராக அப்பிரதேச வர்த்தகர்களால் இன்று புதன்கிழமை காலை 09.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச சபையில் இடம்பெற்ற 30 இலட்சம் ரூபாய் ஊழலைக் கண்டித்தும், வியாபாரிகளுக்கு விதிக்கப்படும் அதிகரித்த வரி அறவீட்டுத் தொகையை கண்டித்தும், பிரதேச சபையினால் பொதுமக்களுக்கான தேவைகள் வழங்கப்படாமைக் குறித்தும், பிரதேச சபைக்கு சொந்தமான வாகனங்களை சுயதேவைக்காக பயன்படுத்துவதைக் கண்டித்துமே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கந்தளாய் பகுதி வர்த்தகர்கள் காலை வியாபார ஸ்தலங்களை மூடியிருந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். Pix by :- Amadoru Amarajeewa
.jpg)
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago