Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை சாரணர் சங்கம் சாரணர் உறுப்புறுரிமை அபிவிருத்தி என்னும் தொனிப்பொருளில் மாவட்டங்கள் தோறும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
இதனொரு கட்டமாக திருகோணமலை, மட்டக்களப்பு , கல்முனை அக்கரைப்பற்று சாரணர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெறுகின்றது.
இச்சந்திப்பில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட சாரணர் ஆணையாளர், உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர்கள், சாரணர் தலைவர்கள், மாவட்ட கிளை தலைவர், செயலாளர், பொருளாளர், சின்னங்களுக்கு பொறுப்பான செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் 130 பேர் பங்கு கொள்ள உள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்ட சாரணர் ஒன்றுகூடல் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகின்றது.
வெள்ளைமணல் அல் அசார் வித்தியாலய மைதானத்தில் நடைபெறும் இம்முகாமில், 22 சாரணர் குழுக்களைச் சேர்ந்த 380 சாரணர்கள் பங்கு கொள்கின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இம்முகாம் ஆரம்பமாகின்றது.
சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு வைபவ ரீதியாக மாவட்ட சாரணர் ஒன்றுகூடல் ஆரம்பித்து வைக்கப்படும். கிழக்கு மாகாண சபையின் தலைவர் எச்.எம்.பாயிஸ் முதன்மை விருந்தினராகக் கலந்து இதனை ஆரம்பித்து வைப்பார்.
மாலை 7.00 மணிக்கு பாசறைத் தீ நிகழ்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.00 மணிக்கு நிறைவு வைபவம் நடைபெறும். இதில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.ரி.எம் நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார்.
2010ஆம் வருட சாரணர் ஒன்றுகூடலில் முதல் தடவையாக திருகோணமலை பெண் சாரணர்களும். (உவர்மலை விவேகானந்தா கல்லூரி – 7வது திருமலை குழு) பங்கு கொள்கின்றனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026