2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவுக்கு மன்னிப்பளிக்க வேண்டும்:கி.மா.எதிர்க்கட்சித் தலைவர்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(திருகோணமலையிலிருந்து றிப்தி அலி)

30 மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயா கமகே தெரிவித்தார்.

விடுதலை புலி உறுப்பினர்களாக இருந்த பிள்ளையான், கருணா, கே.பி ஆகியோரை மன்னித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தற்போது திருகோணமலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபையின் மாதாந்த கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய தயா கமகே,

கடந்த 30 வருடமாக இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தை ஒழிப்பதற்கு தலைமை தாங்கியவர் சரத் பொன்சேகாவே ஆவார். அப்படியான ஒருவரை இன்று சிறைச்சாலையினுல் வைத்திருப்பது பாரிய குற்றமாகும்.

சிறைச்சாலைக்கு  செல்வதற்கு அவர் செய்த குற்றம் என்ன?

அன்று எமக்கு விடுதலைப் புலி உறுப்பினர்களாக இருந்த கருணா, பிள்ளையான் ஆகியோரை கண்டால் நடுங்கும். ஆனால் இன்று அவர்கள் எலி மாதிரி உள்ளனர்.

அத்துடன் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்கிறார்.

அப்படியொன்றால் ஏன் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ செல்லும் போது பாதுகாப்பு வழங்கப்படுவது ஏன்?

பாதுகாப்பு ஒழுங்கான முறையில் இல்லாததால் தான் அவர்கள்  செல்லும் இடமெல்லாம் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.(படப்பிடிப்பு:சமந்த பெரேரா)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .