2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பீங்கான் உடைந்த ஆறு புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

கந்தளாய் குளத்திலிருந்து கிண்ணியா வயல் நிலங்களுக்கு நீர் பாய்கின்ற பீங்கான் உடைந்த ஆறு புனரமைப்புப் பணிகளுக்கென நீர்ப்பாசனத் திணைக்களம் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

பீங்கான் உடைந்த ஆற்றின் தடுப்புச் சுவர் கட்டுதல், நீரைக் கட்டுப்படுத்தும் உபகரணம் பொருத்துதல் போன்ற பணிகளுக்கென இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

உடனடியாக புனர்நிர்மாண வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் விவசாய சம்மேளங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .