2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண நான்காவது தமிழ் இலக்கிய விழா

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண நான்காவது தமிழ் இலக்கிய விழா நாளை சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களம் இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளது.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் கலாசார பவனி, திருஞானசம்பந்தர் வீதி வழியாக சென்று மரத்தடி, பிரதான வீதி, விகாரை வீதி, உவர்மலை மத்திய வீதி வழியாக விவேகானந்தா கல்லூரியை சென்றடையும். அங்கு விவேகானந்தா கலையரங்கில் தமிழ் இலக்கிய விழா நடைபெறும்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கலைஞர்கள் 15 பேருக்கு முதலமைச்சர் விருது வழங்கி வைக்கப்படுவதோடு 7 பேருக்கு இலக்கிய நூல் பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--