2020 நவம்பர் 25, புதன்கிழமை

திருமலை பொது வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

கிழக்கு மாகாண பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஈ.ஜி.ஞான குணாளன் முதலாம் தர வைத்திய அத்தியட்சகராக மத்திய சுகாதார அமைச்சினால் பதவியுயர்வு பெற்று திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இன்று திங்கட்கிழமை பதிவியேற்றுள்ளார்.

மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவரான டாக்டர் ஞானகுணாளன், இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டது தொடர்பாக சுகாதார திணைக்களத்தினால் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொது வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள், குறைபாடுகள் சம்மந்தமாக தெரிவிப்பதற்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்து வந்தது.

அப்பிரச்சினைகளை இலகுவான முறையில் தீர்த்து வைக்க மும்மொழியும் தெரிந்த ஒரு அதிகாரியை தெரிவு செய்தது குறித்து பொது மக்கள் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--