2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நகர சபை கூட்டத்தில் கெளரி முகுந்தன்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகர சபையின்  54ஆவது மாதாந்த சபைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பதில் தலைவர் க.செல்வரசா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர சபையின் முன்னாள் தலைவர் ச.கௌரி முகுந்தன் பிரசன்னமாகி உறுப்பினரது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

எனினும் சபை அமர்வு ஆரம்பமாகி சில நிமிட நேரத்தில் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் ச.கௌரி முகுந்தன் உறுப்பினர் என்ற வகையில் இன்றைய அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X