2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மினி சுனாமியால் கடனீரேரி பாலம் சேதம்;பயணிகள் சிரமம்

Super User   / 2010 நவம்பர் 07 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா பிரதேசத்தில் ஏ-15 வீதியில் உள்ள உப்பாறு கடனீரேரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலி பாலம் சேதமடைந்துள்ளது.

இன்று காலை கொட்டியாரக்குடாவில் ஏற்பட்ட மினி சுனாமி காரணமாகவே இந்த பாலம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாலத்தின் ஊடாக மூதூர், தோப்பூர், வெருகல் மட்டக்களப்பு வரை பயணிகள் இலகுவாக பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்போது இப்பாலம் உடைந்துள்ளதனால் இப்பாதையூடாக மேற்கொள்ளப்பட்டுவந்த போக்குவரத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உப்பாறு கடனீரேரியில் நிரந்த பாலமொன்றை  நிர்மாணிக்கப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .