2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நிலாவெளி விவசாயிகளுக்கான உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

நிலாவெளி பிரதேசத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள  50 விவசாயிகளுக்கு புதிய விவசாய உபகரணங்களை இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை  செடொட் நிறுவனம் வழங்கிவைக்கவுள்ளன.   

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றன. நிலாவெளி பொதுநூல் நிலையத்தின் கேட்போர்கூடத்தில் கிழக்கு மகாண விவசாய அமைச்சர் கலாநிதி துரைரெட்ணராஜாவினால் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

நிலாவெளி, கோபாலபுரம், கும்புறுபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த விவாசயிகளுக்கே இவ் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.  

விவசாயிகளுக்கு நவீன நீர்ப்பாசன முறையினை அறிமுகப்படுத்துவதுடன், பயிர்ச்செய்கைக்கு குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி மரக்கறி மற்றும் பழச்செய்கையினை மேற்கொள்ள வைப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .