2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

உவர்மலை விவேகானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கம் க.பொ.த. சாதாரண தரம் எடுக்கும் பரிட்சார்த்திகளின் நலன் கருதி விசேட கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஓர் கட்டமாக ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் செண்பகா மகா வித்தியாலயம், இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி என்பனவற்றில் பிரதேச பாடசாலை மாணவர்கைள  இணைத்து இலவச கருத்தரங்கினை இன்று புதன்கிழமை நடத்தினர்.

இதில் பங்கு கொள்ளும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச பரீட்சை வினாப்பத்தரங்களும் மாதிரி விடைகளும் அச்சிட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--