2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

புனித மரியாள் கல்லூரியில் சமாதான கலாசார விழா

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில், சமாதான கலாசார விழா நாளை வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு புனித மரியாள் கல்லூரியில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில், வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி பணிகளுக்கு தமது சேவைகளை சிறப்பாக வழங்கியவர்கள் என்ற வகையில் அறுவர் கௌரவிக்கப்படவுள்ளனர்.  


கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி, இராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் மா.இராசரெத்தினம், ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் என்.எம்.முஸ்தபா, வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர் எஸ்.ஜி.எம்.லூயிஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.குருநாதன்,  இடமாற்றம் பெற்ற மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் அ.விஜயானந்தமூர்த்தி ஆகியோரே கௌரவிக்கப்படவுள்ளனர்.   


இதன்போது, நித்திலம் நூல் வெளியிட்டு வைக்கவுள்ளதாக  இதற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்  சிவநிர்த்தானந்தா தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்குமாகாண பிரதம செயலாளர் பி.பாலசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--