2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை

Freelancer   / 2025 நவம்பர் 20 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - நெல்லியடி கரணவாய் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) நள்ளிரவு 12:45 மணியளவில் கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து குறித்த இளைஞன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

பின்னர் வீட்டுக்கருகிலிருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் நெல்லியடி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X