2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான ஒளிப்படத் தொகுப்பு பயிற்சி

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மாவட்ட ஊடகவியலாளர்க்கு  ஒளிப்படத்தொகுப்பு  தொடர்பான பயிற்சிகள்  அன்பவழிபுரத்தில் உள்ள பிறைட் கணினி நிலையத்தில் வழங்கப்படுகின்றது.

யு.எஸ்.ஏயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் இப்பயிற்சிகள் இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளன.  திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள்  சங்கத்தைச்  சேர்ந்த ஊடகவியலாளர்கள்  இப்பயிற்சியில் இணைக்கப்பட்டார்கள்.

திருகோணமலை மக்கள் சேவை மன்றம்  மாவட்ட ஊடகவியலாளர்களின்  இயலுமையை வளர்க்கும் முகமாக பல்வேறு பயிற்சித் திட்டங்களை  மேற்கொண்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--