2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மூதூர் நலன்புரி சங்க தலைவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Super User   / 2011 ஜனவரி 10 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், அப்துல் சலாம் யாசிம்)

மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரி சங்கத்தின் தலைவர் குமாரசுவாமி நாகேஸ்வரன்,  இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கட்டைபறிச்சானிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த சிலர் பொலிஸார் எனக்கூறி வெளியில் அழைத்தச்சென்று தாக்கியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மோசமாக தாக்கப்பட்ட இவர் மூதார் வைத்தியசாiலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இன்று திங்கட்கிழமை காலை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளார்.

இவர் கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சாhர்பில் போட்டியிட்டவராவார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--