2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

திருகோணேஸ்வரத்தில் மகாசிவராத்திரிக்கான ஏற்பாடுகள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

வரலாற்றுப் பெருமை மிக்க திருகோணேஸ்வரத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம்; திகதியன்று மகாசிவராத்திரி விழா சிறப்பாக  நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலாம்; சாம அபிஷேகம் மாலை 5 மணிக்கும் இரண்டாம்; சாம அபிஷேகம்  இரவு 9 மணிக்கும் லிங்கோற்பவர் அபிஷேகம் நள்ளிரவு 11 மணிக்கும் நான்காம்; சாம அபிஷேகம் அதிகாலை 4 மணிக்கும் அவற்றைத் தொடர்ந்து பூஜைகளும் நடைபெறவுள்ளது.
மாலை 7 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளை செல்வி மணிமேகலாதேவி கார்த்திகேசு, திரு. நடராசா செல்வஜோதி, திரு.அ.ஆ.ஜெயரட்ணம் ஆகிய சமய ஆர்வலர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கவுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலாலயங்கள் உட்பட 25 பாடசாலைகளைச் சேர்ந்த முந்நூறுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இக்கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறவுள்ளனர்.  

இதற்கிடையில், மகாசிவராத்திரி தின உற்சவத்தைத் தொடர்ந்து கோணேசப் பெருமான் மார்ச் மாதம் மூன்றாம்  திகதியிலிருந்து தொடர்ந்து 5 நாட்களுக்கு நகர்வலம் வரவுள்ளார்.  முதல் நாள் நகர்வல முடிவில் அன்புவழிபுரம் தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்திலும் இரண்டாவது நாள் உவர்மலை கண்ணகை அம்மன் ஆலயத்திலும் மூன்றாவது நாள் விசுவநாதசுவாமி சிவன் ஆலயத்திலும் நான்காவது நாள் பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலும் கோணேசப் பெருமான் தங்கியிருப்பாரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--