Kogilavani / 2011 மார்ச் 30 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.gif)
	(எஸ்.எஸ்.குமார்)
	
	திருகோணமலை  ராம கிருஷண சங்கம், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான வினாவிடைப் போட்டி ஒன்றினை நடத்தினர். முன்னாள் ஆசிரியரும் உதவிக் கல்வி பணிப்பாளரருமான   கு.சதாசிவம் அவர்களின் நினைவாக இபபோட்டி நடத்தப்பட்டது. 
	
	இதில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி,  உவர்மலை விவேகாநந்தா கல்லுரி,  சண்முகா இந்து மகளீர் கல்லூரி,  புனித சூசையப்பர் கல்லூரி, புனித மரியாள் கல்லூரி, மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, சாகிரா கல்லூரி, விபுலாநந்தா கல்லூரி என்பன கலந்து கொண்டன. 
	
	இன்று புதன்கிழமை, சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியும் ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியும் பங்கு கொண்டன.
	
	இதில் சண்முகா இந்து மகளீர் கல்லூரி நான்கு சுற்றுக்களில் வெற்றி பெற்று  71 புள்ளிகளையும்,  ஸ்ரீ  கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஒரு சுற்றில் வெற்றி பெற்று 46 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. 
	
	இந்நிகழ்வில், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். 
	
	இப்போட்டியை சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்தி முடித்த உதவி கல்வி பணிப்பாளர் விஞ்ஞானம் திரு. எஸ்.சுதாகரன் அவர்களுக்கு பழைய மாணவர் சங்கம் பாரட்டு பத்திரத்தையும் விசேட நினைவு பரிசு ஒன்றினையும் வலயக் கல்வி பணிப்பாளர் மூலமாக வழங்கி வைத்தனர்.
	
	
	 
40 minute ago
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
8 hours ago