2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரியில் கடமையாற்றிய 8 ஆசிரியர்களின்  இடமாற்றத்தை ரத்து செய்யுக்கோரி பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் மூதூர் வலயக்கல்வி பணிமனையின் முன்னால் இன்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை நீக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் இடமாற்றம்
செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளை பெறுப்பேற்று கடமைகளை செய்துவருகின்றனர்

இதற்கமைய இப்பாடசாலையில் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் இன்று காலை 10.30 மணிக்கு மூதூர் வலயக்கல்வி பணிமனையின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.

இதனையடுத்து இவ்விடத்திற்கு பொலிசார் பாதுகாப்புக்கடமையல் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X