Kogilavani / 2011 ஜூன் 23 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு எக்ஸ்போ (East Expo) எனும் பெயரில் திருகோணமலையில் கண்காட்சியொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, மீன்படி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக் கண்காட்சி மெக்கெயர் மைதானத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
50 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இக்கண்காட்சியில், பெறப்படும் நிதியில் 60 வீதம் அரசுக்கும் 40 வீதம் தனியாருக்கும் வழங்குவதற்கான தீர்மானம் இவ் விளக்கமளிக்கும் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான துரையப்பா நவரெத்தினராசா, எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.சுபைர், மாகாண சபை தவிசாளர் எச்.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
5 hours ago
6 hours ago
Kinniyan Thursday, 23 June 2011 06:43 PM
என்ன செய்ய திரும்பவும் ஒரு கண் துடைப்பு வேலை. பாவம் அப்பாவி மக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago