2021 மே 06, வியாழக்கிழமை

பொலிஸார் - பொதுமக்கள் இடையிலான உறவை பலப்படுத்த மீண்டும் பதிவு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரதேசங்களுக்குப் பொறுப்பாக சேவைக்கமர்த்தப்பட்டுள்ள பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவினைப் பலப்படுத்திக்கொள்ளும் வகையில் நாட்டின் சில பிரதேசங்களில் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான மெக்ஸி புரொக்டர் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்துக்கு உட்பட்ட சில பிரதேசங்களில் பொலிஸ் பதிவுகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவிய போதே பொலிஸ் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

'நாட்டின் பாதுகாப்பு கருதியும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமான உறவை பலப்படுத்தும் வகையிலும் பொலிஸ், மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிராமங்கள், நகரங்கள் மற்றும் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் சுமார் 25 முதல் 50 வீடுகள் உள்ளடங்களான பகுதியொன்று பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு என்பவற்றை மேற்படி பொலிஸ் அதிகாரி தலைமையிலான குழு, மேற்கண்ட சிவில் குழுக்களுடன் இணைந்து கண்காணித்து வரும்.

இவ்வாறான குழுக்கள், தங்களது பிரதேசத்தில் யார் யார் தங்கியுள்ளனர் என்ற விபரங்களைச் சேகரித்திருக்கலாம். இது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்காகவே அன்றி மக்களை அச்சத்துக்குள்ளாக்குவதற்கு அல்ல.

இவ்வாறானதொரு நடவடிக்கையே திருகோணமலை பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரதேசங்களின் நிலைமை கையாளப்படும்' என்றார்.(எம்.மேனகா)


  Comments - 0

 • meenavan Wednesday, 21 September 2011 04:27 PM

  பொது மக்கள் அச்சம்கொள்ள தேவை இல்லை என்று சொல்வதன் மூலமே பொதுமக்கள் அச்சமூட்டப்படுகின்றனர்.பயங்கரவாத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் அரச அங்கீகாரத்துடன் அமுலாகிறது.

  Reply : 0       0

  neethan Wednesday, 21 September 2011 04:36 PM

  அரசாங்கம் புலி பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என மார்தட்டினாலும் அதன் கிலி இன்னும் முடியவில்லைபோலும்? மீண்டும் பதிவுகள் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதியில் நடைமுறைக்கு வருகிறது. வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறுகிறதா ?

  Reply : 0       0

  ilakijan Wednesday, 21 September 2011 08:16 PM

  ஆக்கிரமிப்பாளன் அச்சத்துடனேயே இருக்கமுடியும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .