2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

'மும்மொழி இலங்கை' வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவூட்டும் செயலமர்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக 'மும்மொழி இலங்கை' என்ற வேலைத்திட்டம் கிண்ணியா வலய பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக கிண்ணியா வலய பாடசாலை அதிபர் பற்றும் பகுதித் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு   நாளை சனிக்கிழமை  முள்ளிப்பொத்தானை அல் /ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சின் அனுசரணையுடன் கல்வி அமைச்சு நடத்தும் இந்த வேலைத் திட்டம் இலங்கையின் சகல பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--