2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மாவட்ட செயலக புதிய கட்டிடம் திறற்து வைப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

திருகோணமலை - கண்டி வீதியின் 4ம் கட்டை பிரதேசத்தில் ரூபா 40 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய செயலக கட்டிடத்தில் மாவட்ட நிர்வாக நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன,  பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்தன, புத்தசாசன பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோருடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரி.ஆh.;டி.சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .