2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் சம்பிக்க ரணவக்க திருமலைக்கு விஜயம்

Kogilavani   / 2011 நவம்பர் 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)
2012 ஆண்டு நிறைவில் நாடு நூறு வீதம் மின்சார விநியோகம் பெறவேண்டும் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 'விதுலம லங்கா' திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக மின்வலு மற்றும் எரிபொருள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  திருகோணமலைக்கு நேற்று வியாழக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இது தொடர்பாக ஆராயும் மாநாடு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில்; திருகோணமலை மாவட்ட  செயலகத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில், திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபையின்
உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .