2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாணவன் பலி

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முட்டுச்சேனை என்னும் இடத்தில் மாணவன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமாகி உள்ளான்.

 

ஈச்சிலம்பற்று  ஸ்ரீ சண்பகா மகா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் கணேசமூர்த்தி நிசாந்தன் என்ற மாணவனே  இவ்வாறு மரணமாகி உள்ளார்.

கடந்த சில தினங்களாக பெய்த பெரு மழையினால் வெருகல் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்த  நிலையில் உள்ளது. இதனால் முட்டுச்சேனை பிரதேசம் வெள்ளத்தினால் சூழப்பட்டு காணப்படுகிறது.

இதில் விளையாடிய போதே  மாணவன் வெள்ள நீரில் மதியம் 2 மணியளவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.  பிரதேச வாசிகள்  மேற்கொண்ட தேடுதலின் பின்னர் மாலை 3.30 மணயளவில்  மாணவன் சடலமாக  மீட்கப்பட்டுள்ளான்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X