2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

புல் வேளாண்மை ஊக்குவிப்பு தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


புல் வேளாண்மை ஊக்குவிப்பு தினத்தை முன்னிட்டு பால் பண்ணையாளர்களுக்கு 'சீயோதிரி' இன புல் வழங்கும் நிகழ்வு மூதூரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்திற்கான புல் வேளாண்மை ஊக்குவிப்புத்திட்டம் மூதூரில் மேற்கொள்ளப்படுகின்றது.  50 பால்; பண்ணையாளர்களுக்கு புட்கள் வழங்கப்பட்டன.  அத்துடன், சேனையூர் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பசுப்பால் வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட கால்நடை வைத்திய நிபுணர்  டாக்டர் எஸ்.நிஸாம் தலைமையில் கட்டைபறிச்சான் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ரீ.கே.தவராஜன், ஜப்பான் 'பீஸ் வின்ட்' நிறுவனத்தின் வெளிக்கள இணைப்பாளர் கானா தனிக்குச்சி, மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன், மூதூர் கால்நடை வைத்திய நிபுணர் டாக்டர் டிலான் சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பால் உற்பத்தியை அதிகரிக்கும்  முகமாக   இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  போஷக்க்குமிக்க  'சீயோதிரி' இன புல் வகையை கால்நடைகளுக்கு வழங்கும் நேக்கத்திலேயே புல் வேளாண்மை ஊக்குவிப்புத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .