2021 ஜனவரி 27, புதன்கிழமை

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று புதன்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

மூதூர் தள வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி வைத்திய அத்தியட்சகர் வீ.பிரேம் ஆனந்த் தலைமையில் வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக  சென்று நொக்ஸ் வீதி, சந்தை வீதி வழியாக மீண்டும் வைத்தியசாலைச் சென்றடைந்தது.

இந்த பேரணியில்  வைத்தியசாலை ஊழியர்களோடு பாடசாலை மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இதன்போது நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவது சம்பந்தமாக ஒலிபெருக்கி மூலம் விளக்கம் வழங்கப்பட்டதோடு நீரிழிவு பற்றி எழுதப்பட்ட பதாதைகளையும் மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .