2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

குறிஞ்சாக்கேணி பால வீதி திருத்த வேலைக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் வீதி திருத்த வேலைக்காக  5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணிப் பாலத்தின் வீதி கடந்த மாதம் பெய்த  அடை மழையைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில்,  இந்த வீதியின்; ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இந்த நிலையில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு குறிஞ்சாக்கேணி பாலத்தின்  வீதியை செப்பனிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பாலத்தின் வீதி திருத்த வேலைக்காக கிண்ணியா  நகரசபைத் தவிசாளர் எம்.எம்.ஹில்மி தனது முயற்சியின் பயனாக  5 இலட்சம் ரூபா நிதியை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்கிரமவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .