2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கிண்ணியா நகர சபையின் சுகாதார தொழிலாளிகளுக்கு மழை அங்கி வழங்கல்

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


கிண்ணியா நகர சபையில் சுகாதார தொழிலாளிகளாக பணியாற்றும் சகல ஊழியர்களுக்கும் மழை அங்கி நேற்று செவ்வாயக்கிழமை வழங்கப்பட்டது.

மழைக்காலங்களில் வேலை செய்யும் போது ஏற்படும் சிரமத்தையும் அசௌகரியங்களையும் கருத்திற் கொண்டு தடையின்றி வேலைகளை செய்வதற்காகவே இது வழங்கப்பட்டது. இதனை கிண்ணியா நகர சபை தலைவர் டாக்டர் எம்.எம். ஹில்மி வழங்கினார்.

இதேவேளை, கிண்ணியா  குறிஞ்சாக்கேணி  பாலம்  கடந்த மாதம்  பெய்த  அடை மழை காரணமாக போக்குவரத்துக்கு தடையான முறையில்  பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பால திருத்த வேலைக்காக சுமார் 5 இலட்சம் ரூபா நிதியினை கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜய விக்கிரமவினால் கிண்ணியா நகர சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பால புனரமைப்பினால் இப்பாலத்தின் வழியாக பயணிக்கக் கூடிய குறிஞ்சாக்கேணி,  நடுத்தீவு மற்றும் காக்காமுனை ஆகிய பிரதேச மக்களின் நன்மையடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .