2021 மே 10, திங்கட்கிழமை

கனரக வாகனங்களின் பயணத்தை தடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 11 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மீள்குடியேற்றக் கிராமமான காரமுனை பிரதேசத்திற்குச் செல்லும் பாதை கனரக வாகனங்கள் செல்வதை தடைசெய்யக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை அப்பிரதேச மக்கள் இன்று மேற்கொண்டனர்.

மீயான்குளச் சந்தியில் இருந்து காரமுனைக்கு செல்லும் பகுதியில் கொந்தராத்துக் காரர்கள் கிரவல் எடுப்பதற்கு அப் பாதையை பயன் படுத்துவதால் அப் பாதை உடைந்து காணப்படுவதாகவும் கிரவல் எடுப்பதற்கு மாற்றுப் பாதையை பயன்படுத்தமாறும் கோரி இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை இப்பிரதேச மக்கள் மேற்கொண்டனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆனைசுட்டகட்டு,  முல்லிச்சேனை, காரமுனை போன்ற விவசாயக் கிராமங்களுக்குச் செல்லும் மிக முக்கியமான பாதை இதுவாகும். யுத்த காலத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்டிருந்த இவ் வீதி மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தில் புணரமைக்கப்பட்ட இவ் வீதி கனரக வானங்களின் போக்குவரத்தால் சேதமடைந்துள்ளது.

இப் பிரதேச மக்கள் சார்பாக ஆணைசுட்டகட்டு – காரமுனை கமநல அமைப்பினால் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றித் தரமாறு வாகரை பிரதேச செயலாளர் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பொரியியலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X