2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மாவட்ட ரீதியில் கிழக்கு மாகாண சபையின் ஒருங்கிணைப்பு கூட்டங்கள்

Super User   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

2013ஆம் ஆண்டில் நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை கிழக்கு மாகாண சபையின் மாவட்ட ரீதியில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் தலைநகரங்களிலேயே இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்கள் மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடத்தப்படும்.

குறித்த மாட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இக்கூட்டங்களில் பங்குபற்றுவர். இவர்களுக்கு மேலதிகமாக மாகாண சபையின் செயலாளர்  மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோரும் பங்குபற்றுவர்.

மாகாண சபை ஒன்று மாவட்ட ரீதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து 4 மாதங்களுக்கு ஒரு தடவை கூட்டங்களை நடத்தத் தீர்மானித்திருப்பது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திலேயே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தும் யோசனையை சிபாரிசு செய்திருந்தார்.

கடந்த டிசம்பர் 24ஆம் திகதி கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .