2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஆயுர்வேத வைத்திய வெற்றிடங்களை நிரப்ப அனுமதி

Super User   / 2013 ஜனவரி 02 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மாகாண ஆயுர்வேத திணைக்கத்தில் தற்போது நிலவுகின்ற 22 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண அமைச்சரவை வழங்கியுள்ளது.

இந்த 22 ஆயுர்வேத வைத்திய வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற மாகாண அமைச்சரவைக் கூட்டத்தல இந்த அமைச்சரவை பத்திரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .