2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

'மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்'

Kogilavani   / 2013 ஜூலை 29 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

'கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை புதிதாக பொறுப்பேற்றதன் பின்பு இங்கு வாழும் 17 இலட்சம் மக்களின் அவிருத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் அவர்களது வாழ்கைத்தரத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தீர்மானங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் முடிந்த வரை தீர்க்கின்ற,  தீர்வு கான்கின்ற ஒரு விசேட நடவடிக்கையை தற்போது நாம் மேற்கொண்டு வருகின்றோம்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக அக்கரைப்பற்றில் நடைபெற்ற அம்பாறை மாவட்டதிற்கான விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'2013ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைக்காக மாகாண சபை மூலம் ஏறக்குறைய 7000 மில்லியன் ரூபாய் அனைத்து துறைகளுக்குமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்காக  2726 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விசேடமாக உலக வங்கி நிதியுதவியுடன் சுகாதார அபிவிருத்தித்திட்டமும், ஜெய்க்கா மூலம் கிராமிய அபிவிருத்திட்டங்களும், யுனிசெப் மூலம் விரிவுபடுத்தப்பட்ட பலதிட்டங்களும் மாகாணசபை மூலம் செயற்படுத்தப்படவிருக்கின்றமையும் குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும்.

இவை எல்லாவற்றிற்கும் முதலில் எங்களுடைய இணைந்த ஒற்றுமையான செயற்பாடுகள் முக்கியமாகும். இதன் மூலமே அபிவிருத்தி தொடர்பான குறித்த இலக்கை அடையமுடியும் என்பது எனது கருத்தாகும்.

மாகாண நிர்வாகம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்ற இன்றைய காலகட்டத்திலேயே நாம் கலந்துரையாடல் மூலம் கால தாமதங்களை தவிர்த்து நேர்மையான திறமைமிக்க சேவைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு சளைக்காத  வகையில்  நமது மாகாணத்தையும் முன்னேற்ற முடியும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபையில் உள்ள 5 அமைச்சுக்களினதும் செயலாளர்களும், பிரதிப் பிரதம செயலாளர்களும், 19 திணைக்களத் தலைவர்களும் மற்றும் 45 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் இணைந்து செயலாற்றினால் நிச்சயம் நமது மாகாணம் வளங்கொழிக்கும் பூமியாக எதிர்காலத்தில் மற்றமடையும் என்பதை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கவனத்திற் கொண்டு செயற்படுமாறு  தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்' என்று தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .