2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கோணேஸ்வர கடற் பரப்பில் மீனவர்கள் மீது தாக்குதல்

Super User   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கோணேஸ்வர கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மீனவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது இந்த மீனவர்களின் 300 கிலோ மீன்களையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

கிண்ணியா கண்டலடியூற்று பகுதியைச் சேர்ந்த க.பாசுளா (வயது- 24),  மு.ஜவாத் (வயது -40), மு.றகுமத்துல்லா (வயது- 37) ஆகியோரே தாக்குதலுக்குள்ளானவர்களாவர். சிகிச்சைக்காக  இந்த மீனவர்கள் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசராணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X