2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க தூதுவராலய பிரதிநிதிகள் - சம்பந்தன் சந்திப்பு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்
 
அமெரிக்க தூதுவராலய பிரதிநிதிகள் குழுவொன்று திருகோணமலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை 4.45 மணியளவில் வருகைதந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்தித்து கலந்துரையாடினர். சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
 
ஆறுபேர் கொண்ட அமரிக்க துதுவராலய பிரதிநிதிகள் பல்வேறு விடயங்கள் பற்றியும் ஆராய்ந்ததாக சம்பந்தன் தெரிவித்தார். அமெரிக்க தூதுவராலயம் மற்றும் இராஜாங்கத்திணைக்கள பிரதிநிதிகளும் இதில் உள்ளடங்கியிருந்ததாக தெரிவித்த சம்பந்தன், தற்போதைய அரசியல் நிலமைகள் பற்றியும், எந்தளவிற்கு பொறுப்பு கூறும் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஐ.நா. மனித உரிமை தீர்மானங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல் தீர்வு பற்றியும் கேட்டறிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
 
வட மாகாண சபை தேர்தலின் பின்னர் அடைந்த வெற்றிக்குப் பின்னரான நிலைமை பற்றியும் ஆராய்ந்தனர். மாகாண சபையை கொண்டு செயற்படுத்துவதில் புதிய முதலமைச்சர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எந்தளவிற்கு அரசியில் தீர்வு நிலைமைகள் உள்ளன பபற்றிய விபரங்கள் பற்றியும் ஆராயப்பட்டன.
 
இச்சந்திப்பினைத் தொடர்ந்து அக்குழுவினர் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகினர்.
 
இச்சந்திப்பில் அமெரிக்க செனட் சபை வெளிவிவகார குழு உறுப்பினர் மேபி டேமியன், ராஜாங்கத் திணைக்கள பிரிவின் மரியா ஸ்ரொஜோ ஆகியோரும் அடங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .