2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

திருமலை பொது வைத்தியசாலை மத்திய அரசிடம் கையளிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கீதபொன்கலன்
, ஏ.எம்.ஏ.பரீத்

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நூற்றாண்டு பழைமை வாய்ந்த  திருகோணமலை பொது வைத்தியசாலை மத்திய அரசிடம் திங்கட்கிழமை (7) கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு கிழக்கு மாகாண நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த திருகோணமலை பொது வைத்தியசாலையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம ஆகியோரிடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான லலித் திசானாயக, சுசந்த புஞ்சி நிலமே, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .