2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமான பணிகள் அப்பகுதியில் இருக்கும் புத்த பிக்குவின் தலைமையில் வந்த குழுவினரின் தலையீட்டினையடுத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சனிக்கிழமை(19) கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி, கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன், கு.நாகேஸ்வரன், முற்றும் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் சென்று நிலைமையினை பார்வையிட்டனர்.

தற்போது இந்தப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X