2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கந்தளாயில் 22000 ஏக்கரில் நெற்செய்கை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எவ்.முபாரக்)

கந்தளாய் பிரதேசத்தில் இம்முறை 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போகத்திற்கான நெற்செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கந்தளாய் பிரதேசத்தில் இவை தொடர்பாக ஆராயும் பொருட்டு விசேட கூட்டமொன்று நேற்று கந்தளாய் திட்ட முகாமையாளர் காரியாலயத்தில் கந்தளாய் பிரதேச திட்ட முகாமையாளர் பீ.எம்.தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கந்தளாய் பிரதேச செயலாளர் எஸ்.சம்பத் ஜெயசிங்க, கிண்ணியா திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.ஸி.எம்.முஸ்கில் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர், உரக் கூட்டுத்தாபன அதிகாரிகள், கமநலசேவை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கந்தளாய் பிரதேச விவசாயத் திட்டத்தின் கீழ் கந்தளாய் வெள்ளரசன்குளம், வானெல ஆகிய இடங்களிலேயே 22 ஆயிரம் ஏக்கர் காணிகளை இம்முறை செய்கை பண்ண நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதன் பேரில் இம்மாதம் 10ஆம் திகதி பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதென்றும் நவம்பர் மாத நடுப்பகுதியில் விதைத்து முடிப்பதென்றும் பெப்ரவரி மாதம் அறுவடையை ஆரம்பிப்பதென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .