2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

25 கிலோகிராம் மரை இறைச்சியுடன் இருவர் கைது

எப். முபாரக்   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - ஜயந்திபுர காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 25 கிலோகிராம் மரை இறைச்சியை கொண்டு சென்ற இருவரை, இன்று (01) காலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38, 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜயந்தி புர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜயந்திபுர பகுதியிருந்து கந்தளாய் பகுதிக்கு கொண்டு காட்டு வழியாக சென்ற போதே, 25 கிலோகிராம் மறை இறைச்சியுடன் கைது செய்ததாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .