Kogilavani / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலையின் மூத்த கல்வியலாளரான சிங்காரவேலு தண்டாயுதபாணி தனது 41வருட அரச கல்வி சேவையிலிருந்து ஓய்வுப் பெற்றதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம் விழா ஒன்றினை நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வே.பொ.பாலசிஙக்ம் பிரதம அதிதியாகக்க கலந்து கொண்டு சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட்டு வைத்தார்.
பேராசிரியர்களான தனராஸ், சோ.சந்தரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம், புனித அம்பியுலன்ஸ் படையணி, திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம், ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி, புனித சூசையப்பர் கல்லூரி, பத்திரகாளி அம்பாள் பிரதம குரு வேதாகம மாமணி சோ.ரவிச்சந்தரகுருக்கள், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன சி.தண்டாயுதபாணிக்கு பொன்னாடை, பதக்கம், நினைவுப் பொருட்கள் வழங்கி கௌரவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago