Super User / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
கிழக்கு மாகாண 2010 இலக்கிய நூல் பரிசு போட்டி முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளன.
இதற்கினங்க கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகளினால் கடந்த 2010ஆம் ஆண்டில்
வெளியிட்ட படைப்புக்களில் இலக்கிய நூல் பரிசு பொட்டியின் கீழ் எட்டு படைப்புக்கள் மிக சிறந்தவையாக தெரிவுசெய்யப்டுள்ளன.
இந்நூல்களின் படைப்பாளிகளுக்கு அடுத்த மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாகாண தமிழ் இலக்கிய விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட நூல்கள் மற்றும் படைப்பாளிகளின் விபரம்:
1. நாவல் - "சாம்பல் பறவைகள்" - எஸ்.அரசரத்தினம்
2. காவியம் - "நீலாவணன் காவியங்கள்" - திருமதி ஆ.சின்னத்துரை
3. கவிதை - "செம்மாதுழம்பூ" - கவிஞர் ஷெல்லிதாசன்
4. கவிதை - "செங்கமலம்" - அ.தி.மு.வேலழகன்
5. சிறுவர் பாடல்கள் - "இசையோடு அசைபோடுவோம்" – கலாபூஷணம் ச.அருளானந்தம்
6. சிறுவர் சிறுகதை – "சின்னஞ்சிறு கதை" கலாபூஷணம் ச.அருளானந்தம்
7. சிறுவர் நாவல் - "பறக்கும் ஆமை" - ஓ.கே.குணநாதன்
8. இலக்கிய ஆய்வு - "கொட்டியாரம்" - பால. சுகுமார்
46 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago