2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இடமாற்றங்களை வழங்க வேண்டாமென ஆளுநர் உத்தரவு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிழக்கு மாகாணத் திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவோர் அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம்” என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திணைக்களங்களின் செயலாளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும், இன்று (02) உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் செயலாளர்கள் ஆகியோருடனான விசேட சந்திப்பிலேயே, அவர் இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.

குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ, டிசெம்பர் 31​ஆம் திகதி வரை எவ்வித இடமாற்றங்களும் வழங்க வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிமனையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வருடாந்த இடமாற்றம், ஜனவரி மாதம் வழமைபோல் நடைபெறுமென, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X