2020 ஜூன் 06, சனிக்கிழமை

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்,  அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்றுவெளிப் பகுதியில், ஆணா, பெண்ணா என அடையாம் காணமுடியாதளவுக்கு உருக்குலைந்த நிலையில் மனித சடலமொன்று, இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர், மூன்று நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் தெரித்த பொலிஸார், ஆற்றோரப் பற்றைக் காட்டுக்குள் சடலம் காணப்பட்டதால், காட்டு உயிரினங்கள் உடல் பாகங்களைச் சாப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, இது கொலையா அல்லது தற்கொலை என்ற கோணத்தில், தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X