2021 மார்ச் 03, புதன்கிழமை

ஒரு வயது குழந்தைக்கும் தாய்க்கும் தொற்று

Princiya Dixci   / 2021 ஜனவரி 14 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம். கீத் 

திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று (13) கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் முடிவுகளில், ஜின்னா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள ஸ்ரீ விக்கிரமபுர பகுதியில் 20 வயதுடைய தாய்க்கும் அவரது ஒரு வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து, தாயுடனும் மகனுடனும் தொடர்பை பேணிய 22 பேரில் 17 பேருக்கு அன்டிஐன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், நெகட்டிவ் முடிவுகள் வந்துள்ளன.

தொடர்ந்து ஐவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 4ஆம் திகதி, சிறிமாபுர பிரதேசத்தில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 53 வயதுப் பெண்ணின் தங்கையின் மகளும் பேரனுக்குமே தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயையும் குழந்தையையும் கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .